Posts

Showing posts from September, 2019

வீடு கட்ட வாஸ்து சாஸ்திரம் அவசியம் பார்க்க வேண்டுமா? ஏன்...?

வாஸ்து சாஸ்திரத்தின் நோக்கம், மக்களுடைய நல்வாழ்வுக்காக அவர்களுடைய தேவைகளையும், எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்வதுடன்,  கட்டப்படுகின்ற கட்டிடம், மனிதன் இயற்கையுடனும், இப்பிரபஞ்சத்தின் ஒழுங்குடனும் இசைந்து போவதற்கு உதவுவதுமாகும்.  கட்டிடம் கட்டுவதற்கான மனையில் (நிலம்), கட்டிடத்தின் அமைவிடம், நோக்கும் திசை, மற்றும் கட்டிடத்தின் வெவ்வேறு பகுதிகள் இருக்க வேண்டிய இடம் என்பவற்றைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிப்பது வாஸ்து புருஷ மண்டலம் ஆகும். வாஸ்து புருஷ மண்டலம் என்பது ஒரு சதுர வடிவத்தை 64 அல்லது 81 கட்டங்களாகப் பிரித்த ஒரு வரி வடிவமாகும். இவற்றில் குறிப்பிட்ட சில கட்டங்களுக்கு பல்வேறு தேவர்கள் அதிபதிகளாக இருப்பதாக வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. இம் மண்டலத்தின் மையப் பகுதிக்கு வேதகால முழுமுதற் கடவுளான பிரம்ம தேவன் அதிபதியாக உள்ளார். 81 கட்டங்களைக் கொண்ட வாஸ்து புருஷ மண்டலத்தில் மையப்பகுதியிலுள்ள ஒன்பது கட்டங்களும் இவருக்கு உரியவை. இதனால் இப்பகுதி பிரமஸ்தானம்  எனப்படுகிறது. இம்மண்டலத்தில் மொத்தமாக 45 தேவர்கள் இருப்பதாக வாஸ்து நூல்கள் கூறுகின்றன.  முக்கியமான எட்ட...

வீட்டின் 4 மூலைகளில் இருக்கவேண்டிய இருக்கக்கூடாத பொருட்கள் என்ன...?

வாஸ்து முறையில் அமைந்த வீட்டில்தான் அமைதி, செல்வம் எல்லாம் பொங்கி வழியும். நான்கு திசைகள்: வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு. நான்கு மூலைகள்: வடகிழக்கு மூலை, தென்கிழக்கு மூலை, தென்மேற்கு மூலை, வடமேற்கு மூலை. வடக்கும் கிழக்கும் சந்திக்கும் இடம் வடகிழக்கு மூலையாகும் (ஈசான்ய மூலை / சனி மூலை). தெற்கும் கிழக்கும் சந்திக்கும் இடம்  தென்கிழக்கு மூலையாகும் (அக்னி மூலை). தெற்கும் மேற்கும் சந்திக்கும் இடம் தென்மேற்கு மூலையாகும் (நைருதி மூலை/ கன்னி மூலை)  மற்றும் வடக்கும் மேற்கும் சந்திக்கும் இடம் வடமேற்குமூலையாகும் (வாயு மூலை). இவ்வாறு திசைகளையும், மூலைகளையும் அடிப்படையாக கொண்டு அதற்கு ஏற்றார் போல் நல்முறையில் ஒரு வீடோ/ தொழில் நிறுவனமோ கட்டும்பொழுது மனிதனின் வாழ்வு தடுமாற்றமோ, தடமாற்றமோ இல்லாமல் அமையும். திசை காட்டியின் உதவியோடு திசைகளை அறிந்து கொள்ளவேண்டும். வீட்டின் முதன்மை வாசல் வழியாகத்தான் நேர்மறை சக்திகள்  வீட்டினுள் நுழையும். ஆகவே நாம் வாங்கும் வீட்டி வாசம் கதவு தென்மேற்கு திசையை நோக்கி இல்லாதவாறு பார்த்துக் கொள்ளவேண்டும். தென்மேற்கு திசைதான் தீய சக்திகளில் நுழைவு வாயி...

வாஸ்து குறைப்பாட்டை தீர்க்குமா மாவிலை...?

வீட்டில் நடக்கும் எந்த ஒரு சுபகாரியங்கள் ஆகட்டும் இல்லை கோவில் திருவிழாவாகட்டும் மாவிலை தோரணம் இல்லாத ஒரு விழாவை பார்க்கவே முடியாது. எதற்காக மாவிலைக்கு இவ்வளவு முக்கியத்துவம் தருகிறோம்? பூஜைகள் செய்யும்போது கலசத்தின் வாயிலில் தேங்காய் வைப்பதற்கு முன் சில மாவிலைகள் இட்டு, அதன்மீது தேங்காயை வைத்துத்தான்  சாமிக்கு பூஜை செய்வார்கள். விசேஷ நட்களில் மட்டுமல்லாது அடிக்கடி தலைவாயிலில் மாவிலை தோரணம் கட்குவது வாஸ்து குறைபடுகள் விரைவில் தீர வழிபிறக்கும். லட்சுமி கடாஷம் எதிர்மறை அதிர்வுகளை நீக்கும் நச்சுக் காற்றை சுத்தப்படுத்தும்: தலைவாயிலில் இருக்கும் வாக்குதேவதையின் காதில் எதிர்மறை வார்த்தைகள் விழாது தடுக்கும்  மாவிலை காய்ந்தாலும் அதன் சக்தி குறையாது. பிளாஸ்டிக் மாவிலைகளை தொங்கவிடுதல் கூடாது. மாவிலைகளுக்கு இன்னொரு தலி சிறப்பு உண்டு. மரத்திலிருந்து வெட்டப்பட்ட பின்னரும் கூட சுற்றுச்சுழலை பாதுகாக்கும் சக்தி மாவிலைக்கு  உண்டு என்கிறர்கள். அலங்காறத்துக்கு மட்டுமல்ல ஆரோக்கியத்துக்கும் உதவுகிறது மாவிலை என்பதை புரிந்துகொண்டு செயல்படவேண்டும்.

வாஸ்துப்படி மனையின் அமைப்பு எவ்வாறு இருக்கவேண்டும் தெரியுமா....?

வீட்டில் தினந்தோறும் சூரியோதயம் மற்றும் சூரியன் மறைவு நேரத்தில் செய்யப்படும். அக்னி ஹோத்திரம் சுற்றுப்புறச் சூழலை பாதுகாத்து ஆரோக்கியமான வாழ்வு அமையவும் உதவும். வீட்டில் நாமே செய்யும் யாகமே அக்னி ஹோத்திரம். முறையான கணக்குகளுடன் செய்யப்பட்ட பிரமிடுகளை வீட்டில் உபயோகப்படுத்தி மூப்பினை அகற்றலாம். மேலும், மன உலைச்சல், பல்வேறு பிரச்சனைகளை நீக்கி நிம்மதியாக நம்மை வாழவும் வைக்கின்றது. ஈசான்யம் உயரமாகவும், கன்னி மூலை பள்ளமாகவும் இருந்தால் பல துயரங்களில் ஆழ்த்தி விடும். சந்ததிகளுக்குக் கண்டங்கள் உண்டாகும்.  அக்னி மூலை மேடாகவும், வாயு மூலை பள்ளமாகவும் இருந்தால், நல்லவை நடக்கும். பெண்களுக்கு ஆரோக்கியம் ஏற்படும். வாயு மூலை  மேடாகவும், அக்னி மூலை பள்ளமாகவும் இருந்தால், அவ்வீட்டில் தீ விபத்து, திருட்டு போன்றவை ஏற்படும். கன்னி மூலை உயரமாகவும், ஈசான்யம் பள்ளமாகவும் இருந்தால், மிக்க செல்வ வளர்ச்சியும், புகழும் உண்டாகும். ஆரோக்கியம் கூடும். கிழக்கு, அக்னி மூலை ஆகியவை உயரமாகவும், வாயு மூலையும் மேற்கும் பள்ளமாகவும் இருந்தால், துயரத்திலும், சிக்கலிலும் ஆழ்த்தி  விடும். அக்னி மூலையு...

வாஸ்து முறைப்படி நான்கு மூலைகளில் இருக்கக் கூடாத பொருட்களைப் பற்றி பார்ப்போம்....!

வாஸ்து முறையுடன் அமைந்த வீட்டில் அமைதுயும், அன்பும், செல்வமும் பொங்கி வழியும். இங்கு முக்கியமான மூலைகளான ஈசான மூலை, அக்னி மூலை, குபேர மூலை, கன்னி மூலை ஆகிய மூலைகளில் இருக்கவேண்டிய இருக்கக் கூடாத பொருட்களைப் பற்றி பார்ப்போம். தென்கிழக்கு மூலையை அக்னி மூலை என்று அழைப்பர். பூஜை அறை தென்கிழக்கு மூலையில் அமைக்கலாம். அக்னி மூலையில் குடிநீர், நிலைப்பேழை, கழிவறை, குளியலறை இருக்கக்கூடாது. அக்னி மூலையில் சமையலறை அமைக்க வேண்டும். அவ்வாறு அமைக்க முடியாமல் போனால் கிழக்கு முகமாக அமைக்கலாம் அல்லது அடுப்பு, எரிவாயு போன்றவை இருக்கும்படி பார்த்துக் கொள்ளலாம். கழிப்பறை, குளியல் அறைகளை வடமேற்கு (வாயு) மூலையில் அமைக்கவும். சில இடங்களில் விதிவிலக்காக இந்திரன் (கிழக்கில்) மூலையில்  கழிப்பறை அமைக்கலாம். ஈசான மூலை (வடகிழக்கு) வழியேயே சகல சௌபாக்கியங்களும் வீட்டிற்குள் வருகின்றது, எனவே இம்மூலையை சுத்தமாக வைக்க  வேண்டும். பூஜையறை, குழந்தைகள் படிப்பறை, படுக்கையறை, வயது முதிர்ந்தவர்களின் படுக்கையறைகளை ஆகியவை ஈசான மூலையில்  அமைக்கலாம். வீட்டின் கன்னி மூலை எப்போதும் அடைத்து வைத்திருப்பது ந...

ஒரு மனையை கட்ட வாஸ்து சாஸ்திரம் அவசியமா...?

வாஸ்து சாஸ்திரம் என்பது ஒரு மனை எந்த திசையை நோக்கி அமைந்துள்ளது. அந்த மனையானது எந்த திசையை நோக்கி வீடு கட்ட  வேண்டும். எந்த திசையில் வாசல் இருக்க வேண்டும், என்னென்ன திசையில் என்னென்ன அறைகள் இருக்கவேண்டும், என்ற கட்டிடம் கட்டுவதற்குரிய முறைகளையும், அதன் தத்துவங்களையும் விளக்கும் ஒரு வேதம் சார்ந்த அறிவுத்துறையாகும். வாஸ்து சாஸ்திரம் படி ஒரு மனையை  கட்டினால் தான், அந்த வீட்டில் நேர்மறையான சக்திகள் அதிகளவு இருக்கும் என்று வாஸ்து சாஸ்திரங்கள் கூறுகின்றனர். வாஸ்து மூலைகள்: வாஸ்து பூஜை அறை நாம் புதிதாக வீடு கட்டும்போது, தெய்வங்களை வழிபடவேண்டும் என்று தனியாக பூஜை அறை ஒன்றை கட்டுவோம். அந்த பூஜை அறை எங்கு இருக்கவேண்டும் என்றால், பொதுவாக சூரியன் உதயமாகும் சமயத்தில் சூரிய பகவானின் மெல்லிய கதிர்கள் எந்த  இடத்தில் விழுகிறதோ அங்கு பூஜை அறையை அமைப்பது நல்லது என்றுஆன்றோர்கள் பலர் சொல்கின்றார்கள். அதன் படி பார்த்தால் சூரியன் கிழக்கு திசையில் தான் உதயமாகிறது, ஆகையால் வீட்டின் வடகிழக்கு திசையில் வாஸ்து பூஜை அறை அமைப்பது வாஸ்து படி விஷேசம்  ஆகும். பொதுவாக வடகிழக்கு மூலையில் வாஸ்த...

வாஸ்து சாஸ்திரத்தின்படி சமையலறை எந்த திசையில் இருக்க கூடாது...?

வீட்டில் சமையலறை வாஸ்து மூலைகள் ஆன அக்கினி பகவான் மூலையில் அதாவது தென்-கிழக்கு திசைகளில் தான் அமைக்க வேண்டும். சமையலறை அமைப்பதற்கு இதுவே மிகவும் பொருத்தமான பகுதியாகும். இந்த வாஸ்து சாஸ்திரம் படி சமையலறையை அமைப்பதினால்  வீட்டில் ஐஸ்வரியம் பொங்கும். சமையல் செய்யும் பொழுது, வீட்டுப் பெண்மணி அல்லது சமையல்காரர் கிழக்கு திசை நோக்கி இருக்க வேண்டும். அதே போல ’அடுப்பு’  அது கேஸ் அடுப்பாக இருந்தாலும் சரி, விறகு அடுப்பு அல்லது நிலக்கரி அடுப்பு அல்லது மின் அடுப்பாக இருந்தாலும், அது  அமைக்கப்பட்டிருக்கும் திசை முக்கியமானது என நம்பப்படுகிறது. எக்காரணம் கொண்டு வாஸ்து மூலைகள் ஆன ஈசானிய மூலையில் அதாவது வடகிழக்கு மூலையில் சமையலறையை அமைக்கக் கூடாது. அவ்வாறு அமைத்தால் வீட்டில் இருக்கும் செல்வங்களை எரிப்பதற்கு சமம். ஒரு வீட்டின் சமையல் அறை என்பது வாஸ்து படி தென்கிழக்கு திசையில் இருந்தால் சிறப்பாக இருக்கும். அதுவே அக்கினி பகவானுக்கு உகந்த திசை ஆகும். தென்கிழக்கு திசையில் சமையல் அறையை தவிர வேறு அறைகள் இருப்பது நல்லதல்ல.

வாஸ்து புருஷ மண்டலம் என்பது என்ன தெரியுமா...?

வாஸ்து சாஸ்திரத்தின் நோக்கம், மக்களுடைய நல்வாழ்வுக்காக அவர்களுடைய தேவைகளையும், எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்வதுடன், கட்டப்படுகின்ற கட்டிடம், மனிதன் இயற்கையுடனும், இப்பிரபஞ்சத்தின் ஒழுங்குடனும் இசைந்து போவதற்கு உதவுவதுமாகும்.  கட்டிடம் கட்டுவதற்கான மனையில் (நிலம்), கட்டிடத்தின் அமைவிடம், நோக்கும் திசை, மற்றும் கட்டிடத்தின் வெவ்வேறு பகுதிகள் இருக்க வேண்டிய இடம் என்பவற்றைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிப்பது வாஸ்து புருஷ மண்டலம் ஆகும். வாஸ்து புருஷ மண்டலம் என்பது ஒரு சதுர வடிவத்தை 64 அல்லது 81 கட்டங்களாகப் பிரித்த ஒரு வரி வடிவமாகும். இவற்றில் குறிப்பிட்ட சில கட்டங்களுக்கு பல்வேறு தேவர்கள் அதிபதிகளாக இருப்பதாக வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. இம் மண்டலத்தின் மையப் பகுதிக்கு வேதகால முழுமுதற் கடவுளான பிரம்ம தேவன் அதிபதியாக உள்ளார். 81 கட்டங்களைக் கொண்ட வாஸ்து புருஷ மண்டலத்தில் மையப்பகுதியிலுள்ள ஒன்பது கட்டங்களும் இவருக்கு உரியவை. இதனால் இப்பகுதி பிரமஸ்தானம்  எனப்படுகிறது. இம்மண்டலத்தில் மொத்தமாக 45 தேவர்கள் இருப்பதாக வாஸ்து நூல்கள் கூறுகின்றன.  முக்கியமான எட்டுத் தி...

வாஸ்து முறைப்படி இவ்வாறு செய்வதால் பணக்காரராக முடியுமா...?

வாஸ்து என்பது மிகவும் அற்புதமான ஒரு சாஸ்திரம். இதை சரியான முறையில் பின்பற்றினால் நீங்கள் வாழ்வில் உயர்ந்து கொண்டே போகலாம். ஆனால், அதில் தவறு ஏற்பட்டால், நீங்கள் அதள பாதாளத்தில் விழுந்து விடுவீர்கள் என்பதையும் மறந்துவிடக்கூடாது. உங்கள் கையில் அடிக்கடி பணம் வந்து கொண்டிருக்க வேண்டுமானால் நீங்கள் தூங்கும் போது மேற்குப் பக்கம் தலை வைத்துப் படுக்க  வேண்டும். அதாவது, நீங்கள் தூங்கும் போது உங்கள் தலை மேற்குப் பக்கமாக இருக்க வேண்டும். உங்கள் வீட்டில் உள்ள குழாய்களில் அடிக்கடி தண்ணீர் ஒழுகிக் கொண்டிருக்கிறதா என்பதில் கவனமாக இருங்கள். எக்காரணம் கொண்டும் வடக்குப் பக்கம் தலை வைத்துப்படுக்காதீர்கள். இப்படி செய்வதன் மூலம் நீங்கள் சோம்பேறிகளாகி விடுவீர்கள். அதேபோல், பணம்  சம்பாதிக்கும் ஆர்வமும் குறைந்துவிடும். உங்கள் வீட்டில் உள்ள கிழக்குப் பகுதியில் எந்த இடத்திலாவது சில்லறை காசுகள் போட்ட மண் பானை ஒன்றை வையுங்கள். இந்த பானை நிறைய மாற்றப்பட்ட சில்லறைக் காசுகளைப் போட்டு அதன் வாயை மூடாமல் கிழக்கு பக்கத்தின் ஒரு பகுதியில் வையுங்கள். உங்களது சாப்பாட்டு அறையில் பிரேம் போட்ட வட்ட வடிவமான கண...

வாஸ்து: மனநிலையை வர்ணங்கள் நிர்ணயிக்கும் என்பது உண்மையா...?

நம் கண்கள் வர்ணங்களைப் பார்க்கும்பொழுது, நம்மையும் அறியாமல் புத்துணர்ச்சி ஏற்படுகிறது. அதிலும் நமக்கு ஒவ்வொரு வர்ணத்தைப் பார்க்கும் பொழுதும் வெவ்வேறு விதமான உணர்வுகள் உண்டாகின்றன. பூந்தோட்டங்களைப் பார்க்கும் பொழுது கிடைக்கின்ற மகிழ்ச்சி, வண்ணத்துப் பூச்சிகளைப் பார்க்கின்ற பொழுது கிடைக்கின்ற மகிழ்ச்சி, நீர் வீழ்ச்சியைப் பார்க்கின்ற பொழுது கிடைக்கின்ற புத்துணர்வு என மனநிலையில் பல்வேறு வகை உணர்வுகள் தோன்றுகின்றன. இது போன்ற உணர்வுகள் நம் வீட்டிலும் நமக்கு ஏற்படுகின்றது. நம் வீட்டின் ஒவ்வொரு அறைக்கும் ஒவ்வொரு உணர்வு நிலை உள்ளது. அதைச் சரியாக வெளிப்படுத்துவதும், தவறாக வெளிப்படுத்துவதும் நாம் வீட்டிற்கு பூசும் வர்ணங்கள் தான் தீர்மானிக்கின்றன. பொதுவாக நாம் எல்லா அறைகளுக்கும் ஒரே நிறத்தைத் தேர்வு செய்து பூசுவது. உண்டு. அப்படிச் செய்யும்பொழுது ஒரே மாதிரியான மனநிலை நமக்கு ஏற்படும். ஆனால் நாம் வேலை செய்யும் பொழுது இருக்கும் மனநிலை உறங்கும் போதோ, சமைக்கும் போது இருக்கும்  மனநிலை, படிக்கும் போதோ இருக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை. அதுமட்டுமின்றி இப்பிரச்சனைகளை சரி செய்வதே குறிப்பிட்ட அறைகளில...

ஈசான மூலையில் வைக்கக்கூடாத பொருட்கள் எவை தெரியுமா...?

ஈசான மூலை (வடகிழக்கு) வழியேயே சகலசௌபாக்கியங்களும் வீட்டிற்குள் வருகின்றது, எனவே இம்மூலையை சுத்தமாக வைக்க வேண்டும். ஈசான மூலையில் பூஜையறை, குழந்தைகள் படிப்பறை, படுக்கையறை, வயதுமுதிர்ந்தவர்களின் படுக்கையறைகளை அமைக்கலாம். ஈசான மூலையை அடைப்பதுபோல் நிலைப்பேழை வைக்கக்கூடாது. அம்மி, ஆட்டுக்கல், விறகு சுமை, தேவையற்ற பழைய பொருட்களையும் அடைத்து வைக்கலாகாது. வீட்டின் பிரதான ஈசான மூலையில் கழிப்பறை, குளியலறை, செப்டிக்டேங்க், துணிதுவைக்கும் கல் போன்றவைகள் இருக்கக்கூடாது. பரணில் ஈசான மூலையில் பொருட்களை  வைக்கக்கூடாது. வீட்டின் ஈசான மூலை கீழ்நிலைத் தொட்டி, கிணறு போன்றவை அமைக்க வேண்டிய இடம், ஈசான மூலையில் நீரோட்டம் இல்லாத போது,  தென்மேற்கு, தென்கிழக்கு தவிர்த்து கிணறு தோண்டவும், பிறகு ஈசான மூலையில் கீழ்நிலைத் தொட்டி அமைக்கவும். வடகிழக்கு மற்றும்  வடக்கு திசைகளில் கனமான பொருட்களான பீரோவை வைக்கக் கூடாது. அது நம் பண விரயத்துக்கு தடை போதும். பூஜை பொருட்களை அல்லது கடவுள் படங்களை ஏதாவது உத்திரம் அல்லது நிலை அடுக்கின் கீழ் வைக்க கூடாது. அப்படி வைத்தால் அது  மன அழுத்தத்தை தரும்.

அக்னி மூலையில் இந்த பொருட்களை வைக்கவே கூடாது; அது என்ன...?

Image
அக்னி மூலை - தென்கிழக்கு மூலை. இங்கு சமையற்கூடம் இருக்க வேண்டும். பெண்களின் மன, உடல் நலத்தின்மீது ஆதிக்கம் செலுத்தும் மூலை ஆதலால் பழுதில்லாமல் அமைக்க வேண்டும். வீட்டின் பிரதான அக்னி மூலையில் சமையற்கூடம் அமைக்க இயலா விடினும் சமையற்கட்டின் அக்னி மூலையில் அடுப்பு (மண்ணெண்ணெய், எரிவாயு, போன்றவை) இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும். விதிவிலக்காக வாயு (வடமேற்கு) மூலையில் சமையற்கூடமும்,  அடுப்பும் அமைக்கலாம். அக்னி மூலையில் குடிநீர், நிலைப்பேழை, கழிப்பறை, குளியலறை, இருக்கக்கூடாது. வீட்டின் பிரதான அக்னி மூலையில் கிணறு,கழிப்பறை, குளியலறை, கழிவுத் தொட்டி, (செப்டிக்டேங்க்) துணிதுவைக்கும் கல் போன்றவைகள் இருக்கக்கூடாது. வீட்டின் அக்னி மூலையில்  மின்சாதனங்களை வைக்கலாம். சமையலறை என்பது வளமையை குறிக்கும் இடமாகும். அதனால் இந்த இடம் தென்கிழக்கு திசையில் இருக்க வேண்டும். வடகிழக்கு திசையில் சமையலறை அமைந்தால், வீட்டில் பணம் மற்றும் உடல்நல பிரச்சனைகள் ஏற்படும். ஒரு வேளை வடகிழக்கு திசையில் இது  இருந்தால், மூன்று வெண்கல பாத்திரத்தை தலைகீழாக உட்கூரையில் தொங்க விடுங்கள்; ஆனால் அது அடுப்பை நோக...

மேற்கு பார்த்த மனைகளில் வீடு கட்டும்போது பின்பற்ற வேண்டியவைகள்!!

வடக்கு மற்றும் கிழக்கு பார்த்த மனைகள் மட்டுமே வாஸ்து அமைப்பில் நல்ல மனைகள் மற்ற திசைகளை பார்த்த மனைகள் கொஞ்சம் பலன் குறைந்த மனைகள் என்று நினைக்கின்றனர். மேற்கு பார்த்த மனைகளில் இல்லங்கள் அமைக்கும்போது வாஸ்து விதிகளையும், பழந்தமிழர் மனைபடி சாஸ்திரமான ஆயாதி பொருத்த அமைப்பை உட்புகுத்தி கட்டும் போது அற்புதமான வாழ்க்கை வாழமுடியும். மேற்கு பார்த்த மனைகளை கட்டும்போது வருண பகவான் தனது அதிகாரத்தை பயன்படுத்துகிறார். எனவே அத்திசையின் கடவுளை அனுசரித்து வீட்டை அமைக்கும் போது மழையை எப்படி வருணபகவான் வழங்குகிறாரோ அதுபோல அனைத்து போகங்களும் கிடைக்கும்  வீடாக இருக்கும். வாஸ்து அமைப்பில் மேற்கு பார்த்த மனைகளை தேர்ந்தெடுக்கும்போது மனையில் இருந்து நீங்கள் சாலைக்கு இறங்கும்போது, மேற்கு புறம் இறங்கி வடக்கு மட்டுமே ப்யணாப்பட வேண்டும். அப்படி சாலைகள் இல்லையென்றால் அந்த மனையை தவிர்க்க வேண்டும். இந்த மனைகளை வீடு கட்ட உபயோகிக்கும் போது வடக்கு மற்றும் கிழக்கு அதிக இடங்கள் இருக்கும் அமைப்பினை ஏற்படுத்தி வீடு கட்ட வேண்டும். அப்படி கட்டகூடிய கட்டிடம் தென்கிழக்கும் வடமேற்கும் இடத்தின் தரை அமைப்பில் உடைபடாத...

வாஸ்துவில் பார்க்கப்படும் எட்டு திசைகளும் அதன் பலன்களும்....!!

Image
கிழக்கு -  சூரியன் உதிக்கும் திசை, பூமியானது இத்திசை நோக்கியே சுழல்கின்றது சூரியனின் ஆற்றீல் அறிந்த நமது முன்னோர்கள் இத்திசை  “சூரிய நமஸ்காரம்” செய்தனர். இந்த திசை இந்திர பகவானுக்கு உரிய திசையாகும். மேற்கு - சூரியன் மறையும் திசை, பூமி சுற்றும் திசைக்கு எதிர்ப்புறம், இந்த திசைக்கு உரிய பாலகர் வருண பகவான் ஆகும். வடக்கு - சூரியன் உதிக்கும் திசை நோக்கி நாம் இருக்கும்போது நமக்கு இடப்புறம் உள்ள திசையாகும். இந்த திசைக்கு உரிய பாலகர் குபேர  ஆவார். வாஸ்து சாஸ்திரத்தில் இது மிக முக்கியமானது திசையாக கருதப்படுகின்றது. தெற்கு - சூரியன் உதிக்கும் திசைக்கு வலது புறம் உள்ள திசை, இந்த திசைக்கு உரிய பாலகர் “எமன்” ஆவார். வாஸ்து சாஸ்திரத்தில் இந்த  பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி பல விவரங்கள் கூறபட்டடுள்ளது. வடகிழக்கு - வடக்கும், கிழக்கும் சேரக்கூடிய திசை வடகிழக்கு திசையாகும். இது வாஸ்து சாஸ்திரத்தில் மிக இன்றிமையாத, ஈசனுக்கு உரிய  தெய்வ சக்தி உடையது. பாலகர், ஈசான்கள். இந்த திசை சரியாக ஒர் இல்லத்தில் அமைந்தால் அனைத்து நலன்களூம் குறைவில்லாமல்  கிடைக்கும். தென்கிழக்கு -...

வாஸ்து பகவான் எப்படி உருவானது; புராணக்கதை...!!

முன்பொரு காலத்தில் அண்டகாசுரன் என்ற அரக்கன், தன்னை வெற்றிகாண எவரும் இல்லை என்ற மமதையில் சிவபெருமானை போருக்கு அழைத்து போரிட்டான். அப்போது சிவபெருமானுடன் போரிட்ட அசுரனின் நெற்றியில் வழிந்த வியர்வையில் இருந்து ஒரு பூதம் தோன்றியது.  மிகவும் கரிய நிறம் கொண்ட அந்த பூதத்திற்கு அகோரப் பசி ஏற்பட்டது. கண்ணில் கண்ட அனைத்தையும் விழுங்கியது. கொடிய அசுரன் அண்டகாசுரனின் உடலையும் விழுங்கியது. தீராத பசியில் இருந்த பூதம் தன் பசியை தீர்த்து வைக்குமாறு சிவபெருமானிடம் வேண்டியது. சிவபெருமான் அந்த பூதத்திற்கு அனைத்தையும் உண்ணும் வரத்தை அளித்தார். இதனால் அந்த பூதத்திற்கு இந்த பூமியையே அழிக்கும் சக்தி உண்டானது. உடனே தேவர்கள் அனைவரும் பிரம்மாவிடம் முறையிட்டனர். பிறகு பிரம்மதேவன் அந்த பூதத்திடம் பூமியில் மக்கள் வீடு கட்டும் போது அவர்கள் படைக்கும் உணவை சாப்பிடு என்றும், சாஸ்திரப்படி வீடு  கட்டவில்லை என்றால் அந்த வீட்டில் வசிப்பவரை வாட்டு என்றும் வரம் அளித்தார். அந்த பூதமே வாஸ்து பகவான் என்றும் வாஸ்துப்படி வீடு கட்டுபவர்களுக்கு நன்மைகளையும், மற்றவர்களுக்கு தீமையையும் அளித்து வருகிறார். வாஸ்து என்றால் ...

வீட்டில் உள்ள வாஸ்து தோஷங்களை விரட்டும் பரிகாரங்கள்...!

எல்லா வீடுகளும் வாஸ்து விதிப்படி கட்டப்படுவதில்லை என்பதே எதார்த்தம். அப்படி சில வீடுகள் வாஸ்து விதிகள் பின்பற்றபடாமல் கட்டப்படுவதால், வீட்டிற்கு வாஸ்து தோஷம் ஏற்பட்டு அங்கு வசிப்பவர்களுக்கு பலவிதமான இன்னல்களை ஏற்படுத்துகிறது. வீட்டில் இருக்கின்ற எதிர்மறை அதிர்வுகள் வெளியேறவும், வாஸ்து தோஷங்கள் நீங்கவும் வீட்டின் வாயிற்படியின் மேலாக ஒரு செம்பு கம்பியை நீளவாக்கில் கட்டி, அதில் புதிய மாவிலைகளை தோரணமாக கட்டி தொங்கவிட வேண்டும். வீட்டிற்கு வெளிப்புறமாக நெற்கதிர்களை கட்டவேண்டும். அவ்வாறு வீட்டில் கட்டப்பட்டிருக்கும் நெற்கதிர்களை பலவிதமான பறவைகள் வந்து சாப்பிடுவதால் அப்பறவைகள் தெய்வீக ஆற்றல்களை வீட்டிற்குள்ளாக கொண்டு வருகின்றன. தினமும் காலையில் கிழக்கு நோக்கி தீபமேற்றி  “ஓம் நமோ வாஸ்து புருஷாய நமஹ” என்ற மந்திரத்தை 27 முறை ஜபியுங்கள். வீட்டின் மேற்குப்பகுதியில் நறுமணத்தைப் பரப்பும் ரோஜா, முல்லை, சம்பங்கி, மல்லி போன்ற மலர்ச் செடிகளை வளர்ப்பதால் வீட்டிற்குள்ளாக  தெய்வீக சக்திகளை வரவழைக்க செய்யும். வீட்டின் வடகிழக்கில் துளசி, நந்தியாவட்டை போன்ற பூச்செடிகள் வளர்க்கலாம். ஆண்டுக்கொ...

கழிவறைகள் எந்த இடத்தில் அமைப்பது சிறந்தது...?

வாஸ்து கோட்பாடுகளைப் பின்பற்றி வரும் ஒரு வீடு அதில் வசிப்பவருக்கு மன அமைதி மற்றும் முன்னேற்றத்துடன் கூடிய ஆரோக்கியமான, தடைகளற்ற வீட்டை வழங்குகிறது. குளியல் அறை என்பது ஒரு வீட்டின் மிக இன்றியமையாத பகுதிகளில் ஒன்றாக உள்ளது. வீட்டின் கழிவறை ஏதேனும் ஒரு இடத்தில் அமைக்கப்பட்டிருந்தால், அது எதிர்மறை ஆற்றலை உள்ளே அனுமதித்து விடும். வாஸ்து  கோட்பாடுகளின்படி அது ஆரோக்கியம் மற்றும் செல்வ நிலை சம்பந்தமான சிக்கல்களுக்கு வழி வகுக்கிறது. வடமேற்கிலும், வடக்கிலும் குளியலறை மற்றும் அட்டேச்சுடு டாய்லெட்டுகள் அமைக்கலாம். டாய்லெட்டில் கம்மோடை தெற்கு - வடக்காக  அமைக்கவேண்டும். ஒருபோதும் டாய்லெட்டை வடகிழக்கில் அமைக்கவேண்டாம். ஏனென்றால் வடகிழக்கு செல்வம் வளரும் இடமாகும். கழிவறைகளில் முகம் பார்க்கும் கண்ணாடியை பதிக்கவேண்டுமானால், அதனை வடக்கு மற்றும் கிழ்க்கு சுவற்றில் இருக்கும்படி அமைக்கலாம். பாத்ரூம் டைல்ஸ் இள வண்ணங்களில் இருக்கட்டும். கருப்பு கலரைத் தவிர்க்கவும். குளியலறை, டாய்லெட்டின் தரை கிழக்கு அல்லது வடக்கு நோக்கி ஸ்லோப்பாக இருக்கவேண்டும்.

வீட்டின் படுக்கை அறையின் ஜன்னல்கள் வாஸ்து முறைப்படி எங்கு அமைப்பது நல்லது...?

எல்லா ஜன்னல்களும், வெளிப்புறச் சுவரில் அமைந்திருக்கவேண்டும். ரூம்களுக்குள் ஜன்னல் கதவுகள் திறக்கும்படி இருக்கக்கூடாது. பெரிய ஜன்னல்களை வடகிழக்கு திசையிலும், சிறிய ஜன்னல்களை தென்மேற்கிலும் வரும்படி அமைக்கவேண்டும். மொத்த ஜன்னல்களைக் கூட்டினால், அது இரட்டைப் படையில் வரவேண்டும். 4. ஜன்னல்களிலும் கதவுகளிலும் அமைக்கப்பட்டிருக்கும்  சன்ஷேடுகள் வடகிழக்கு திசையை நோக்கியபடி இருக்கவேண்டும். படுக்கை அறையின் தென்மேற்கில் இருக்கவேண்டும். ஆனால், ஒரேயடியாக தென்மேற்கு மூலைக்குப் போய்விடக்கூடாது. மாஸ்டர் பெட் ரூம், வீட்டின் தென்மேற்கு மூலையில் இருக்கும்படி அமைக்கவேண்டும். படுக்கையறையில் வெளிச்சம் மிதமாகவும், கண்களை உறுத்தாமலும் இருக்கவேண்டும். எனவே விளக்குகளையோ, டேபிள் லேம்புகளையோ  அமைக்கும்போது, அதிலிருந்து வரும் வெளிச்சமோ, நிழலோ மனதிற்கு இதமளிப்பதாக இருக்கவேண்டும். படுக்கையறையில் கடவுள் சிலைகளை வைக்கக்கூடாது. இயற்கைக் காட்சிகள், மலர்கள், குழந்தைகள், மற்றும், கோவிலகள் முதலான பெயிண்டிங்குகளை மாட்டி வைக்கலாம். வடகிழக்கு மூலையில் கட்டாயமாக, எடை அதிகமுள்ள சிலைகளை வைக்கக்கூடாது. படுக்கையற...

பூஜையறையை எங்கு எவ்வாறு அமைப்பது.....?

பொதுவாக வீட்டில் பூஜையறையை ஈசானிய மூலையில் அமைக்க வேண்டும் என்ற கருத்து பலரால் கூறப்பட்டு வருகின்றது. வாஸ்து முறைப்படி பூஜை அறையின் வடகிழக்குப் பகுதியில் அதிக பாரத்தை வைக்க கூடாது. மேலும் வடகிழக்கு மூலையில் மாடம் அமைப்பது  சிறந்தது ஆகாது. வாஸ்து முறைப்படி பூஜை அறையின் மேற்குச் சுவரில்பூஜை சம்பந்தப்பட்ட பொருட்கள், விக்ரங்கள், படங்களை தவிர வேறு எந்த  பொருளையும் வைக்கக் கூடாது, மேலும் இந்த சுவரில் ஜன்னல் வைப்பது சிறந்தது ஆகாடு. பூஜை அறையின் வடக்கில் ஒரு ஜன்னலை வைப்பது சிறந்தது. அல்லது ஜன்னல் அமைக்கும் போது அதன் வழியே சூரிய ஒளி பூஜை அறைக்குள் வரும். இதனால் நன்மைகள் உண்டாகும். கடவுள் படங்களை மேற்கு அல்லது தெற்குச் சுவரில் மாட்ட வேண்டும். அப்போது தான் அவை முறையே கிழக்கு அல்லது வடக்கு திசை நோக்கியிருக்கும், கடவுள் படங்கள் மாட்டப் பட்டிருக்கும் உயரத்திற்கு மேலே எந்தப் பொருளும் மாட்டப் கூடாது. பூஜை அறையில்  கடவுள்களின் உருவத்திற்கு மலர்கள் போடும்போது அந்தக் கடவுள்களின் முகமும், பாதமும் மலர்களால் மறைந்து விடாதபடிப் பார்த்துக்  கொள்ள வேண்டும். பூஜை அறையில் விளக்குகளை தெ...

வீட்டின் நுழைவாயில் எவ்வாறு அமைக்கவேண்டும்..?

வீட்டின் பிரதான நுழைவாசலில் அமையும் மெயின் கதவு, வடக்கு, கிழக்கு மற்றும் வடகிழக்கு திசைகளை நோக்கி அமைந்திருக்கவேண்டும். இந்த மெயின் வாசல்  நுழைவாயில் கதவு, வீட்டின் ஏனைய கதவுகளைவிட அளவில் சற்றுப் பெரியதாக இருக்கவேண்டும். வீட்டின் பிரதான நுழைவாயில்  வீட்டின் பின்பக்க வாசலை நோக்கியபடி எதிரும் புதிருமாக இருக்கக்கூடாது. அப்படி இருந்தால், வீட்டின் சக்தியானது  பின்வாசல் வழியாக வெளியேறிவிடும். வீட்டுக்குள் சுழன்று நற்பயன் விளைவிக்கக்கூடிய நல்ல சக்தி வெளியேறி விடுவது வீட்டுக்கு  நல்லதல்ல. எனவே பிரதான வாசல் கதவுக்கு நேரெதிராக பின் வாசல் கதவு இருக்கும்படி அமைக்கக்கூடாது. உங்கள் வீட்டு பிரதான வாசலுக்கு எதிராக மரமோ, கிணறோ இருக்கக்கூடாது. அப்படி இருந்தால், அதுவும் உங்கள் வீட்டுக்குள் நேர்மறை  சக்தியை நுழைய விடாமல் தடுக்கும். வாசல் கதவுகள் உள்புறமாக திறப்பதுபோல் அமையவேண்டும். வெளிப்பக்கமாக திறக்கும்படி அமைக்கக்கூடாது. கதவின் அகலம் கதவின் உயரத்தில் பாதியளவு இருக்கவேண்டும். வாசல் கதவு, மற்றுமுள்ள கதவுகள், ஜன்னல் கதவுகள் முதலியவற்றைத் திறக்கும்போது, சத்தம் எழுப்பக்கூடாது...